பாபர் மசூதி இடிப்பு தினம் - பேருந்து, ரயில் நிலையங்களில் போலீசார் சோதனை

December 6, 2022

பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் காவல்துறை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் கோட்டைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தே பிறகே அனுமதித்து வருகின்றனர். காட்பாடி, அரக்கோணம் பகுதியிலுள்ள ரயில்வே சந்திப்பு மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலுள்ள பேருந்து நிலையம், […]

பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் காவல்துறை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் கோட்டைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தே பிறகே அனுமதித்து வருகின்றனர். காட்பாடி, அரக்கோணம் பகுதியிலுள்ள ரயில்வே சந்திப்பு மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலுள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் தூத்துக்குடி ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வெடிகுண்டு காவலர்கள், மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தினர். திருப்பூர் ரயில் நிலையத்தில் 50-க்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu