450 கைதிகளுக்கு பஹ்ரைன் மன்னர் பொது மன்னிப்பு

September 6, 2024

பஹ்ரைன் மன்னா் ஹமத் பின் இசா அல் காலிஃபா 450 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். பஹ்ரைன் 2002-ஆம் ஆண்டில் அமீரகத்திலிருந்து மன்னராட்சியாக மாறியது. அதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு முதல் அல் காலிஃபா அமீராக இருந்தார். பிறகு மன்னராக மாறினார். இந்நிலையில் பஹ்ரைனில் மன்னராட்சி அறிமுகமான 25வது ஆண்டு விழாவையொட்டி, மன்னா் ஹமத் பின் இசா அல் காலிஃபா 450 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட கைதிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் […]

பஹ்ரைன் மன்னா் ஹமத் பின் இசா அல் காலிஃபா 450 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பஹ்ரைன் 2002-ஆம் ஆண்டில் அமீரகத்திலிருந்து மன்னராட்சியாக மாறியது. அதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு முதல் அல் காலிஃபா அமீராக இருந்தார். பிறகு மன்னராக மாறினார். இந்நிலையில் பஹ்ரைனில் மன்னராட்சி அறிமுகமான 25வது ஆண்டு விழாவையொட்டி, மன்னா் ஹமத் பின் இசா அல் காலிஃபா 450 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட கைதிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் அரசியல் கைதிகள் என்று தகவல் கிடைத்துள்ளது. 2011-ல் ‘அரபு வசந்தம்’ போராட்டம் பஹ்ரைனில் பரவியபோது, நூற்றுக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu