பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு கடந்த 9-ந் தேதி ஆஜராக வந்தார். அப்போது அதே வழக்கில் அவரை துணை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனால் வன்முறை வெடித்தது.
இம்ரான்கான் கைதைத் தொடர்ந்து லாகூரில் நடந்த வன்முறைகள் தொடர்பாக, அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் அவருக்கு லாகூர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு நேற்று முன் ஜாமீன் வழங்கியது.