இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருக்கு ஜாமின்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மல்யுத்த வீராங்கனைகள் ஒரு சிறுமி உட்பட ஏழு பேர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இதன்பின் அந்த சிறுமியும் அவரது தந்தையும் புகாரை திரும்ப பெற்றுக் கொண்டனர். இந்த புகாரின் தொடர்பாக பிரிஜ் பூஷன் சிங்-ன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து ஜூன் […]

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மல்யுத்த வீராங்கனைகள் ஒரு சிறுமி உட்பட ஏழு பேர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இதன்பின் அந்த சிறுமியும் அவரது தந்தையும் புகாரை திரும்ப பெற்றுக் கொண்டனர். இந்த புகாரின் தொடர்பாக பிரிஜ் பூஷன் சிங்-ன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து ஜூன் 15ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை டெல்லி காவல் துறையினரால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜாமீன் கோரி டெல்லி பெருநகர நீதிமன்றத்திற்கு பிரிஜ் பூஷன் சிங் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் பூஷனிற்கு நிபந்தனையுடனான ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu