அதானி குழுமத்தின் நிதி நிறுவனமாக அதானி கேப்பிட்டல் விளங்குகிறது. இது கவுதம் அதானியின் வங்கி நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த நிறுவனத்தை பெயின் கேப்பிட்டல் நிறுவனம் கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பெயின் கேப்பிட்டல், கார்லி குழுமம், செர்பரஸ் கேப்பிட்டல் ஆகிய 3 நிறுவனங்களுக்கு இடையே அதானி கேப்பிட்டல் நிறுவனத்தை கையகப்படுத்தும் போட்டி நிலவியது. இறுதியில், பெயின் கேப்பிட்டல் கிட்டத்தட்ட 1500 கோடி ரூபாய்க்கு அதானி கேப்பிட்டல் நிறுவனத்தை கையகப்படுத்தும் என தகவல் வெளிவந்துள்ளது.
கௌதம் அதானி தனது முக்கிய வர்த்தகத்துறையில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும், பிற வர்த்தகத்தில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி, அதானி கேப்பிட்டல் நிறுவனம் விற்கப்பட உள்ளது. அதானி கேப்பிட்டல் நிறுவனத்தின் புக் வேல்யூவுக்கு இரு மடங்கு விலையில் பெயின் கேப்பிட்டல் அதனை கையகப்படுத்துகிறது. மேலும், கூடுதலாக 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.