பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம், தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 28% உயர்வை பதிவு செய்துள்ளது.கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 3551 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், நிதி நிறுவனத்திற்கு வட்டி மூலமாக கிடைத்த வருவாய் மட்டுமே 26% உயர்வடைந்து, 8845 கோடி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம், பெண்ணட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 26% பங்குகளை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செய்திகளால், இன்றைய பங்குச் சந்தையில் பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 2.8% சரிவை சந்தித்துள்ளன.