கடந்த மே மாதத்தில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மொத்த விற்பனை 29% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில், நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை எண்ணிக்கை 355148 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில் 275868 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருசக்கர வாகனப் பிரிவில், 23% விற்பனை வளர்ச்சி பதிவு செய்யப்பட்டு, கடந்த மே மாதத்தில், 249499 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, உள்நாட்டு வாகன விற்பனை 194811 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், ஏற்றுமதி வாகன விற்பனை 112885 ஆக பதிவாகியுள்ளது.. மேலும், வர்த்தக வாகனப் பிரிவில், மொத்த விற்பனை 80% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த மே மாதத்தில், பஜாஜ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் 47452 என்ற எண்ணிக்கையில் விற்கப்பட்டுள்ளன.