நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 23 மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரியும் மாணவர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், ஓ.எம்.ஆர் தாளை சேதப்படுத்தும் நேர்மையற்ற காரியங்களில் ஈடுபட்ட 63 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீதான புகார்களை விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 மாணவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை, 9 மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு தடை, 2 மாணவர்களுக்கு தலா ஓராண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன