கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கோழி முட்டை கொண்டு வர தடை

April 24, 2024

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் அங்கிருந்து கோழி முட்டைகளை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கேரள மற்றும் கேரள எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் கோழி இனங்கள், முட்டைகள், கோழியின் எச்சம் உள்ளிட்டவற்றை ஏற்றி வருவதை 8 சோதனை மற்றும் தடுப்புச் சாவடியில் ஒரு கால்நடை உதவி […]

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் அங்கிருந்து கோழி முட்டைகளை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கேரள மற்றும் கேரள எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் கோழி இனங்கள், முட்டைகள், கோழியின் எச்சம் உள்ளிட்டவற்றை ஏற்றி வருவதை 8 சோதனை மற்றும் தடுப்புச் சாவடியில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு கண்காணித்து வருகிறது. இந்த பறவைக்காய்ச்சல் நோய் மனிதனையும் பாதிக்கக் கூடியது. எனவே இது பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தற்காலிகமாக கேரளா மாநில பிற பகுதிகளில் இருந்து கோழி இனங்கள், முட்டைகள் கோழி எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் ஆகியவை வாகனங்களில் ஏற்றி வருவது மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu