வணிக ரீதியான தாய்ப்பால் விற்பனைக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வணிக ரீதியான தாய்ப்பால் விற்பனைக்கு அதிரடி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் FSS சட்டம் 2006 விதிமுறைகளின் படி வணிக ரீதியாக தாய்ப்பாலை பதப்படுத்துதல், விற்பனை செய்தல் சட்ட விரோதமாகும். எனவே தாய்ப்பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களை வணிகமயம் ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது