அலங்கரிக்கப்பட்ட பஸ்கள் மற்றும் வாகனங்களால் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்தது.ஆண்டுதோறும் சபரிமலைக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை தொடங்க இன்னும் ஒரு மாத காலமே இருக்கிறது. இந்த பூஜை காலங்களில் வேன்,பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதில் வரக்கூடிய பக்தர்கள் தனது வாகனங்களுக்கு அலங்கார விளக்குகள், தோரணங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து வரும் நிலையில் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. எனவே சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் அலங்கார வாகனங்களில் வருவதை கேரளா ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மேலும் தடையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.