உத்திரபிரதேச அரசு ஹலால் சான்று பெற்ற பொருட்களுக்கு தடை உத்தரவிட்டுள்ளது
ஹலால் தரச் சான்று இந்தியாவில் சட்டபூர்வமாக நடைமுறையில் இல்லை எனினும் சில நிறுவனங்கள் சட்டவிரோதமாக உணவு, மருந்து, அழகு சாதன பொருட்களுக்கு ஹலால் தரச் சான்று அளித்து வருகின்றன. இது குறித்து லக்னோவில் புகார் எழுப்பப்பட்டது. அதில் ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட் பல்வேறு பொருள்களுக்கு சட்டவிரோதமாக ஹலால் சான்றுகளை அளித்து வருகின்றன இதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக நேற்று உத்தர பிரதேச அரசு தீர்ப்பு வழங்கியது.
இதில் ஹலால் தர சான்று பெற்ற உணவு பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது. தடையை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மசெய்யும் பொருட்கள் இந்த தடை வரம்புகள் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.














