இரண்டு பிரபலமான இந்திய மசாலா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப் பொருள் இருப்பதாக சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் தயாரிப்புகளில் உள்ள மசாலா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருள் இருப்பதாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த மசாலா பொருட்களின் மாதிரிகளை சேகரிக்க உணவு ஆணையர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து எம்.டி.எச் மற்றும் எவரெஸ்ட் மற்றும் இதர அனைத்து மசாலா தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு 20 நாட்கள் ஆய்வகத்தில் இருந்து அறிக்கை வரும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை கூறுகையில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறும் அளவுகளில் எத்லீன் ஆக்சைடு இருப்பதாக கூறப்படும் இந்த இரண்டு மசாலா பிராண்டுகளில் நான்கு பொருட்களை பயன்படுத்துவதற்கு தடைவித்து உணவு கட்டுப்பாட்டாளர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளது. இது குறித்து எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் ஃபுட் இரண்டும் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.