இந்தியாவில் வெளிநாட்டு இன நாய்கள் விற்பனைக்கு தடை

March 14, 2024

இந்தியாவில் ஆக்ரோச தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆக்ரோஷத்தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்கள் ஆன பிட்புல், ராட்வீலர், புல்டாக், உல்ஃப் நாய்கள் மற்றும் டெரியர் உள்ளிட்ட நாய்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடைவிதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வீடுகளில் இது போன்ற இன நாய்களை வளர்த்து வரும்நிலையில் அவைகளுக்கு கருத்தடை செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் […]

இந்தியாவில் ஆக்ரோச தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆக்ரோஷத்தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்கள் ஆன பிட்புல், ராட்வீலர், புல்டாக், உல்ஃப் நாய்கள் மற்றும் டெரியர் உள்ளிட்ட நாய்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடைவிதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வீடுகளில் இது போன்ற இன நாய்களை வளர்த்து வரும்நிலையில் அவைகளுக்கு கருத்தடை செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பீட்டா இந்தியா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாய்கள் மற்றும் மனிதர்களை பாதுகாக்க வேண்டும் என ரிட் மனு தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து கால்நடை வளர்ப்பு ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளிநாட்டு இன நாய்கள் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu