ரஷ்ய குடியுரிமை பெற்ற தென்கொரிய தொழிலதிபருக்கு தடை விதித்து தென்கொரியா அரசு அறிவித்துள்ளது.
தென்கொரியாவும் வடகொரியாவும் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. இதுவரை வடகொரியாவை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் சோய் சோன் கோன் என்பவர் மீது ஒருதலைப்பட்ச தடைகளை தென்கொரியா அரசு அறிவித்துள்ளது. அவர் தென்கொரியாவை விட்டு வெளியேறி ரஷ்ய நாட்டின் குடியுரிமை பெற்று, அங்கேயே நிறுவனம் ஒன்று தொடங்கி ரஷ்யாவின் ஆயுதங்களை வடகொரியா ராணுவத்துக்கு சப்ளை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.
மேலும் வடகொரியாவுக்கு நிதி திரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவாகின. இதையடுத்து சோய் சோன் கோன் மீதும் அவர் நிறுவனம் மீதும் தடை விதித்து தென்கொரியா அரசு உத்தரவிட்டுள்ளது.