திருவுதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பூஜைகளில் அரளிப்பூ பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள இளம் பெண் அரளி பூவை எதேர்ச்சியாக உட்கொண்டதால் மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அரளிச் செடியின் இலைகளை தின்ற பசுவும், கன்றும் இறந்த சம்பவம் நடைபெற்றது. மேலும் அரளி இலை மற்றும் பூ விஷத்தன்மை கொண்ட தாவரம் என்பதை மருத்துவ நிபுணர்களும் உறுதி செய்துள்ளனர். இதனை அடுத்து திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பூஜைகள் வழிபாடுகள் நெய்வைத்தியங்களில் அரளி பூ பயன்படுத்தக் கூடாது. அதற்கு மாற்றாக மருத்துவ குணங்கள் இருந்து துளசி மற்றும் பூ இனங்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள அரளி செடி அல்லாத பூந்தோட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது