அமெரிக்க பல்கலைக்கழக விண்ணப்பத்தில் இனத்தை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
அமெரிக்காவில் பல்லைக்கழக மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது இனத்தை குறிப்பிடும் நடைமுறை இருந்து வந்தது. 1960-ல் இருந்து இந்த நடைமுறை அமலில் உள்ளது . தற்போது அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மாணவர்கள் அவர்களுடைய அனுபவங்கள் மற்றும் திறமைகள் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். இனத்தின் அடிப்படையில் அல்ல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். மொத்தம் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 நீதிபதில் தடைக்கு ஆதரவு அளித்தும் 3 நீதிபதிகள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.














