நைஜீரியாவின் கட்சினா மாகாணத்தில் பயங்கரவாதிகள் அரசு ஆதரவு படையினர் 21 பேரை கொன்றுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் பயங்கரவாத அமைப்புகள், குறிப்பாக ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் மற்றும் 'பண்டிட்ஸ்' என்ற கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. பண்டிட்ஸ் குழுக்கள் பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகள் மற்றும் பணம் கடத்தலில் ஈடுபடுகின்றன. இந்த கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. அவை பாதுகாப்பு படையினரையும் பொதுமக்களையும் தாக்குகின்றன. ராணுவம் மற்றும் அரசு ஆதரவு பெற்ற படையினர்கள் இந்த குழுக்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் கட்சினா மாகாணத்தில் பயங்கரவாதிகள் அரசு ஆதரவு படையினர் 21 பேரை கொன்றுள்ளனர்.