வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி - இணைய சேவை நிறுத்தம்

August 6, 2024

வங்கதேசத்தில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 2007 க்கு பின் இப்பொழுதுதான் ராணுவ ஆட்சி அமைந்துள்ளது. வங்கதேசத்தில் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. சிராஜ் கன்ஸ் என்னும் பகுதியில் 13 காவலர்கள் போராட்டக்காரர்களால் அடித்தே கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆட்சியாளர்கள் மீது போராட்டக்காரர்கள் கடும் கோபத்தில் இருப்பதை இது காட்டுகிறது. இந்நிலையில் பிரதமர் ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டக்காரர்களை அமைதியை கடைப்பிடிக்கும்படி அந்நாட்டு ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர் என்று […]

வங்கதேசத்தில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

2007 க்கு பின் இப்பொழுதுதான் ராணுவ ஆட்சி அமைந்துள்ளது. வங்கதேசத்தில் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. சிராஜ் கன்ஸ் என்னும் பகுதியில் 13 காவலர்கள் போராட்டக்காரர்களால் அடித்தே கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆட்சியாளர்கள் மீது போராட்டக்காரர்கள் கடும் கோபத்தில் இருப்பதை இது காட்டுகிறது. இந்நிலையில் பிரதமர் ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டக்காரர்களை அமைதியை கடைப்பிடிக்கும்படி அந்நாட்டு ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

போராட்டக்காரர்கள் டாக்காவை நோக்கி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் பொது மக்களை கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தனர். எனவே மீண்டும் வன்முறை வெடிக்கும் சூழல் உள்ளதால் நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu