வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கதேச தலைநகர் தாகாவில், லட்சக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் திரண்டு, பிரதமருக்கு எதிரான பேரணி மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஆளும் அரசு கலைக்கப்பட்டு, தேர்தல் முடியும் வரை கட்சி சார்பற்ற அரசு அமைக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். வங்கதேசத்தில் அதிகரித்து காணப்படும் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் பதவி விலக வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது, வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, காவல்துறையினர், போலி தோட்டாக்கள், கண்ணீர் புகை குண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வங்கதேசத்தில் அரசியல் குழப்ப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.