வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பு தலைவா் கைது - போராட்டம் வலுப்பெறுகிறது

November 27, 2024

வங்கதேசத்தில், தேச துரோக வழக்கில் 'சமிலிதா சநாதனி ஜோட்' என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வழக்கு, கிருஷ்ண தாஸ் உட்பட 19 பேர் மீது வங்கதேசத்தின் தேசியக் கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் கடந்த அக்டோபரில் பதிவு […]

வங்கதேசத்தில், தேச துரோக வழக்கில் 'சமிலிதா சநாதனி ஜோட்' என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டார்.

அவரது ஜாமீன் மனுவை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வழக்கு, கிருஷ்ண தாஸ் உட்பட 19 பேர் மீது வங்கதேசத்தின் தேசியக் கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் கடந்த அக்டோபரில் பதிவு செய்யப்பட்டது. கிருஷ்ண தாஸ், டாக்காவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சட்டோகிராமுக்குச் செல்லும் போது, போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ண தாஸின் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu