வங்கதேசத்தில் பிரதமர் அலுவலகம், காவல்துறை இணையதளங்கள் முடக்கம்

July 23, 2024

வங்கதேசத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் காவல்துறை இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. வங்காள தேசத்தில் இட ஒதுக்கீட்டு சதவீதத்தை குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும் போராட்டம் ஓயாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் மத்திய வங்கி மற்றும் காவல் துறை இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இந்த இணையதள பக்கங்களில், மாணவர்களை கொள்வதை நிறுத்துங்கள். ஆபரேஷன் அண்ட் டவுன் என்ற வாசகங்கள் திரையில் வருகின்றன. இது போராட்டம் அல்ல இனிமேல் போர் என்றும் ஹேக்கர்கள் வாசகங்களை […]

வங்கதேசத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் காவல்துறை இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

வங்காள தேசத்தில் இட ஒதுக்கீட்டு சதவீதத்தை குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும் போராட்டம் ஓயாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் மத்திய வங்கி மற்றும் காவல் துறை இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இந்த இணையதள பக்கங்களில், மாணவர்களை கொள்வதை நிறுத்துங்கள். ஆபரேஷன் அண்ட் டவுன் என்ற வாசகங்கள் திரையில் வருகின்றன. இது போராட்டம் அல்ல இனிமேல் போர் என்றும் ஹேக்கர்கள் வாசகங்களை அமைத்துள்ளனர். மாணவர்களால் அமைதியாக நடத்தப்பட்ட போராட்டத்தை அரசு வன்முறையாக மாற்றியுள்ளது. இது போராட்டம் அல்ல, நீதிக்கான போர் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதோடு பிற ஹேக்கர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இந்த முன்னெடுப்பில் சேர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu