வங்கதேசத்தில், ஒரே நாளில் 2292 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டெங்கு பாதித்து 9 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இதுவே உச்சபட்ச டெங்கு பாதிப்பாக கூறப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகம், கடந்த 24 மணி நேரத்தில், உச்சபட்ச டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 32977 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது. அதில், 25626 பேர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பி உள்ளதாக கூறியுள்ளது. இந்நிலையில், தலைநகர் டாக்காவில் மட்டும் 7175 பெயர் டெங்கு பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளது.
வங்கதேசத்தின் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஜூன் மாதத்தில், நாட்டின் டெங்கு பாதிப்பு உச்சத்தை எட்டி உள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் மொத்தம் 5956 பேர் பாதிப்படைந்து 34 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான டெங்கு பாதிப்பு புதிய உச்சமாக அமைந்துள்ளது.