பங்களாதேஷ் தலைநகர் தாக்காவுக்கு அருகில், புதிய அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலை கட்டுமானத்தில், ரஷ்யா ஈடுபட்டிருந்தது. இதற்காக, ரஷ்யாவுக்கு 300 மில்லியன் டாலர்கள் பணத்தை சீன நாணயமாக பங்களாதேஷ் செலுத்த உள்ளது. கடந்த வாரம், இந்த கட்டண முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில், சீன நாணயத்தில் பணத்தை ஏற்க மறுத்த ரஷ்யா, ரூபிளில் பணத்தை செலுத்த கூறியிருந்தது. தற்போது, சீன யுவானில் பணத்தைப் பெற சம்மதித்துள்ளது.
ரஷ்யாவால் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையம், வங்கதேசத்தின் எதிர்கால எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது. ரஷ்ய அரசின் அணுமின் நிறுவனமான Rosatom இதனை கட்டமைத்திருந்தது. ரஷ்யாவின் கடன் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த அணு உலையின் மதிப்பு 12.65 பில்லியன் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் நடந்து கொண்டிருப்பதால், நேரடியாக, இரு நாட்டு மத்திய வங்கிகளும், பணத்தை பரிமாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.