வங்கதேசத்தின் முதல் அதிபர் மற்றும் முன்னாள் பிரதமரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படத்தை வங்கதேச பணத் தாள்களில் இருந்து நீக்குவது என இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.
மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு பின்னர், பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. புதிய பணத்தாள்களில் ஷேக் முஜிபுரின் படத்திற்கு பதிலாக மதம் சார்ந்த கட்டமைப்புகள், வங்காள பாரம்பரியம் மற்றும் மாணவர்களின் ஜூலை போராட்ட அச்சடிப்புகள் இடம்பெற இருக்கின்றன. இந்த புதிய நோட்டுகள் 6 மாதங்களில் புழக்கத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














