உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 31 ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி இதுவரை நான்கு தோல்வி, இரண்டு வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது.
வங்காளதேசம் அணி ஐந்து தோல்வி ஒரு வெற்றியுடன் இரண்டு புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. இந்த அணி முதல் ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக 5 முறை தோல்வி அடைந்தது. தற்போது டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.