வங்கிக்கணக்கு மோசடிகளை தடுக்க 3 வகையான கணக்குகள் நேற்று முதல் முடக்கபட்டுள்ளன.
வங்கிக்கணக்குகளில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால், அதனை தடுப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ரிசர்வ் வங்கி நேற்று முதல் (புதன்கிழமை) அமல்படுத்துகிறது. இதன் மூலம், 3 வகையான கணக்குகள் நேற்று முதல் மூடப்படுகின்றன. முதலில், 2 ஆண்டுகளுக்கு மேலாக பரிமாற்றம் இல்லாத செயலற்ற கணக்குகள், மோசடிகளுக்கு முக்கிய இலக்காகக் காணப்படுகின்றன. இரண்டாவது, 12 மாதங்களுக்கு மேலாக பரிமாற்றம் இல்லாத செயல்படாத கணக்குகள் மூடப்படும். மூன்றாவது, நீண்ட காலமாக பூஜ்ய தொகையுடன் இருக்கும் கணக்குகளும் மூடப்படலாம். இந்த நடவடிக்கைகள் வங்கிகளின் சுமையை குறைத்து, மோசடி ஆபத்துக்களை தடுப்பதற்கான திட்டமாக அமைகின்றன.