கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்திய வங்கிகளின் வராக்கடன் அளவு 3.9 சதவீதமாக குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி 6 மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு இருமுறை நிதி உறுதித்தன்மை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதன் சமீபத்திய அறிக்கை நேற்று வெளியானது. அதில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்திய வங்கிகளின் வராக்கடன் அளவு 3.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது 3.6 சதவீதமாக மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகந்த தாஸ் கூறுகையில், வங்கிகள் மற்றும் பெரு நிறுவனங்களின் இருப்புநிலை அறிக்கைகள் வலுவாக இருப்பது வளர்ச்சிக்கான இரட்டை இருப்புநிலை சாதகமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.