முக அங்கீகாரம், கருவிழி ஸ்கேனை வங்கிகள் வரம்புடன் பயன்படுத்த அனுமதி

January 14, 2023

முக அங்கீகாரம், கருவிழி ஸ்கேனை வங்கிகள் வரம்புடன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை குறைக்கும் விதமாக சில சமயங்களில் முக அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள இந்திய வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார், பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகள் இந்த வசதியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. மேலும், இந்த வசதியை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வரம்பை மீறும் தனிப்பட்ட பரிவர்த்தனைகளை (ஆண்டுக்கு ரூ.20 […]

முக அங்கீகாரம், கருவிழி ஸ்கேனை வங்கிகள் வரம்புடன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை குறைக்கும் விதமாக சில சமயங்களில் முக அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள இந்திய வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார், பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகள் இந்த வசதியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. மேலும், இந்த வசதியை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வரம்பை மீறும் தனிப்பட்ட பரிவர்த்தனைகளை (ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை) மேற்கொள்ளும் நபர்களின் விவரங்களை வங்கிகள் சரிபார்க்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சரிபார்ப்பு சோதனை கட்டாயமில்லை. ஆனால், வரி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் அரசு அடையாள அட்டை, பான் அட்டை ஆகியவை வங்கிகளுடன் பகிரப்படாத சந்தர்ப்பங்களில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu