மார்ச் 31 அன்று வங்கிகள் திறக்க உத்தரவு

March 29, 2025

2024-25 நிதியாண்டின் கணக்குகளை முடிக்க மார்ச் 31 அன்று வங்கிகள் வழக்கமான பணிநேரத்தில் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 (திங்கள்கிழமை) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பொது விடுமுறை அமலுக்கு வரும். ஆனால், இந்தியாவின் நிதியாண்டு ஏப்ரல் 1-ல் துவங்கி மார்ச் 31 வரை முடிவடைகின்றது. இதனால், 2024-25 நிதியாண்டின் கணக்குகளை முடிக்க மார்ச் 31 அன்று வங்கிகள் வழக்கமான பணிநேரத்தில் செயல்பட வேண்டும் என்று […]

2024-25 நிதியாண்டின் கணக்குகளை முடிக்க மார்ச் 31 அன்று வங்கிகள் வழக்கமான பணிநேரத்தில் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு மார்ச் 31 (திங்கள்கிழமை) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பொது விடுமுறை அமலுக்கு வரும். ஆனால், இந்தியாவின் நிதியாண்டு ஏப்ரல் 1-ல் துவங்கி மார்ச் 31 வரை முடிவடைகின்றது. இதனால், 2024-25 நிதியாண்டின் கணக்குகளை முடிக்க மார்ச் 31 அன்று வங்கிகள் வழக்கமான பணிநேரத்தில் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அரசு பரிவர்த்தனைகள் மற்றும் கணக்குகளை முடிக்க அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும். மேலும், மார்ச் 31ஆம் தேதியில் அரசு பரிவர்த்தனைகள், காசோலைகள் போன்றவை சிறப்பு தீர்வு மூலம் முடிக்கப்படும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை அந்த நாளில் செலுத்த முடியும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu