ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் கமலா ஹாரிஸ் என்று ஒபாமா கூட்டத்தினரை பார்த்து கூறினார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜனநாயக கட்சியின் நான்கு நாள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. மாநாட்டில் பங்கேற்று பேசிய கமலஹாரிஸ் ஜோபேடனுக்கு நன்றி தெரிவித்தார். இன்று இரண்டாவது நாளாக அது நடைபெறுகிறது. இன்று முன்னாள் அதிபர் ஒபாமா இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் கமலா ஹாரிஸ் என்று அவர் கூட்டத்தினரை பார்த்து கூறினார்.
கமலா ஹாரிஸ் தன் முழு வாழ்வையும் மக்களுக்காக செலவிட்டுள்ளார் என்று ஒபாமா பாராட்டினார். மேலும் அவர் பேசுகையில், கமலா அதிபர் பணிக்கு தயாராக இருக்கிறார். அமெரிக்கா ஒரு புதிய அத்தியாயத்திற்கு தயாராகி வருகிறது. அதிபராக கமலா சிறப்பாக செயல்படுவார் என்று பேசினார்.














