பார்ட் செய்த தவறு - ஆல்பாபெட் நிறுவனத்திற்கு 100 பில்லியன் டாலர்கள் இழப்பு

February 9, 2023

அண்மையில், 'பார்ட்' என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்பாட் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில், கேள்வி ஒன்றுக்கு இந்த பார்ட் சாட்பாட் தவறாக பதில் அளித்ததாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்தின் சந்தை மதிப்பு சரிந்தது. வழக்கமான வர்த்தக நாளில், 9% க்கும் கீழ் ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்தது. கிட்டத்தட்ட 100 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை இந்த நிறுவனம் இழந்ததாக […]

அண்மையில், 'பார்ட்' என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்பாட் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில், கேள்வி ஒன்றுக்கு இந்த பார்ட் சாட்பாட் தவறாக பதில் அளித்ததாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்தின் சந்தை மதிப்பு சரிந்தது. வழக்கமான வர்த்தக நாளில், 9% க்கும் கீழ் ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்தது. கிட்டத்தட்ட 100 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை இந்த நிறுவனம் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்ட் சாட்பாட்டிடம், 'ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகளில் எதனை என் 9 வயது குழந்தைக்கு கூறலாம்?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, 'சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள பூமி போன்ற கிரகங்களின் முதல் புகைப்படங்களை எடுப்பதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நிறுவப்பட்டது' என்று பார்ட் பதில் அளித்துள்ளது. ஆனால், பொதுவாக, புறக்கோள்களின் முதல் புகைப்படங்கள் ஐரோப்பாவைச் சேர்ந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்படும். இதனை நாசாவும் உறுதி செய்துள்ளது. எனவே, பார்ட் அளித்த பதில் தவறு. இந்தத் தவறு மிகப்பெரியதாக சுட்டிக்காட்டப்பட்டதால், ஆல்பாபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சரிந்ததாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu