இலங்கை அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அருகே உள்ள கடல் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் இன்று நண்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது இது கொழும்புவில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 1126 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திருச்செந்தூரில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது திருச்செந்தூரில் சஷ்டி விழா நடைபெற்று வரும் நிலையில் அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தற்போது கடலின் காற்றின் வேகம் அதிகரித்தலால் பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் எனவும் மேலும் கடலோர பாதுகாப்பு குழு மற்றும் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.