உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

September 5, 2023

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 15 இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறை, சஞ்சு சாம்சன் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு குழு சேர்மன் அஜித் […]

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 15 இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறை, சஞ்சு சாம்சன் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு குழு சேர்மன் அஜித் அகர்கர், செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். இந்த முறை பேட்டிங் மற்றும் பௌலிங் ஆகிய இரண்டிலும் இந்திய அணி சிறப்பான திறமையை வெளிக்காட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர் பட்டியலில் உள்ள பிற வீரர்கள்; சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், சூரியகுமார் யாதவ்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu