ஆன்லைன் சூதாட்ட தடையால் Dream11 உடன் உறவை முறித்த BCCI

புதிய சட்டத்தால் அதிர்ச்சி – இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ரத்து மத்திய அரசு கொண்டு வந்த புதிய கேமிங் மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்று சட்டமாகியது. இதன் மூலம் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதையடுத்து Dream11, MPL போன்ற தளங்கள் தங்கள் நிஜ பண அடிப்படையிலான விளையாட்டுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ட்ரீம்11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியது. இதுகுறித்து BCCI செயலாளர் […]

புதிய சட்டத்தால் அதிர்ச்சி – இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ரத்து

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கேமிங் மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்று சட்டமாகியது. இதன் மூலம் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதையடுத்து Dream11, MPL போன்ற தளங்கள் தங்கள் நிஜ பண அடிப்படையிலான விளையாட்டுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ட்ரீம்11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியது. இதுகுறித்து BCCI செயலாளர் தேவஜித் சைக்கியா, “அரசு சட்டத்தை கொண்டு வந்த நிலையில், Dream11 போன்ற நிறுவனங்களுடன் இனி எந்தவித உறவும் இருக்காது” எனத் தெரிவித்தார். ஆசியக் கோப்பைக்கு முன்பாகவே BCCI புதிய ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ஏலங்களை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu