கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க அனைத்து மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சுற்றறிக்கையில், கடந்த மழைப் பொழிவின்போது நீர் அதிகம் தேங்கிய இடங்களில் மோட்டார்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். நாளை முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்.
மழைநீர் வடிகால்களில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் மருத்துவ குழுக்கள், போதுமான மருந்துகள் இருப்பு இருப்பதை மருத்துவ குழுவினர் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சுற்றறிக்கையில் கூறியுள்ளது.