சீனத் தலைநகர் பீஜங்கில், 19 ஆண்டுகளில் முதல் முறையாக மக்கள் தொகையில் சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. நகரத்தில் நிரந்தரமாக வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 21.88 மில்லியனில் இருந்து 21.84 மில்லியன் ஆக குறைந்துள்ளது. மேலும், பீஜிங் நகருக்கு புலம் பெயர்ந்து வசிக்கும் மக்களின் எண்ணிக்கையும் 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில், கணிசமான அளவில் சரிவடைந்துள்ளது. முன்னதாக, கடந்த 2003 ஆம் ஆண்டு, சார்ஸ் நோய் பரவலின் போது, பீஜிங் நகரில் மக்கள் தொகை சரிவு பதிவானது. அதன் பின்னர், 19 ஆண்டுகள் கழித்து, 2022 ல் சரிவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சீன அரசாங்கத் தரவுகள் தெரிவித்துள்ளதாவது: "இந்த மக்கள் தொகை சரிவு மதிப்பீட்டு அளவில் குறைவானதே ஆகும். மேலும், நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை சரிவை பீஜிங் நகரும் எதிரொலித்துள்ளது" - இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மக்கள் தொகை சரிவடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, இளைய தலைமுறையினரிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் - திருமணத்தில் நாட்டமின்மை போன்றவை சொல்லப்படுகின்றன.