சீன தலைநகர் பீஜிங்கில், தீவிர புழுதிப் புயல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நகரம் முழுவதும் புழுதிப் போர்வை போர்த்தியது போல உருமாறி உள்ளது. மேலும், அடர்த்தியான மேகங்களும் சூழ்ந்துள்ளன. இதனால், அங்கு காற்று மாசு அபாயகரமான கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
காற்று தர நிர்ணயப்படி, PM10 அளவிலான பொருட்கள் மனிதர்களின் மூக்கு வழியாக நுரையீரல் வரை சென்றடையும் அபாயம் உள்ளது. இந்நிலையில், பீஜிங்கில், அதிகாலை 6 மணி அளவில், ஒரு கியூபிக் மீட்டர் காற்றில் 1667 மைக்ரோகிராம் அளவுகளில் PM10 பொருட்கள் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உலக சுகாதார மையம் நிர்ணயித்துள்ள அளவைவிட 37 மடங்கு அதிகமாகும். எனவே, அங்கு, பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இது பீஜிங் வரலாற்றில் மிக மோசமான புழுதி புயலாக அறிவிக்கப்பட்டுள்ளது.