ஆர்டெமிஸ் அக்கார்ட்ஸ் - பெல்ஜியம் கையெழுத்து

January 24, 2024

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறைகள் சர்வதேச அளவில் வகுக்கப்பட்டுள்ளன. இதனை பின்பற்றுவதாக பெல்ஜியம் நாடு உறுதி அளித்துள்ளது. அதன்படி, ஆர்டெமிஸ் அக்கார்ட்ஸ் - ல் கையெழுத்திட்டுள்ளது. ஆர்டெமிஸ் அக்கார்ட்ஸ் - ல் கையெழுத்திடும் மற்றொரு ஐரோப்பிய நாடாக பெல்ஜியம் உள்ளது. நேற்று, ஐரோப்பிய விண்வெளி மாநாடு நடைபெற்ற போது, பெல்ஜியம் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஹாட்ஜா லாபிப், அந்நாட்டு அறிவியல் துறை செயலாளர் தாமஸ் டெர்மின் ஆகியோர் ஆர்டெமிஸ் அக்கார்ட்ஸ் […]

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறைகள் சர்வதேச அளவில் வகுக்கப்பட்டுள்ளன. இதனை பின்பற்றுவதாக பெல்ஜியம் நாடு உறுதி அளித்துள்ளது. அதன்படி, ஆர்டெமிஸ் அக்கார்ட்ஸ் - ல் கையெழுத்திட்டுள்ளது.

ஆர்டெமிஸ் அக்கார்ட்ஸ் - ல் கையெழுத்திடும் மற்றொரு ஐரோப்பிய நாடாக பெல்ஜியம் உள்ளது. நேற்று, ஐரோப்பிய விண்வெளி மாநாடு நடைபெற்ற போது, பெல்ஜியம் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஹாட்ஜா லாபிப், அந்நாட்டு அறிவியல் துறை செயலாளர் தாமஸ் டெர்மின் ஆகியோர் ஆர்டெமிஸ் அக்கார்ட்ஸ் - ல் கையெழுத்திட்டனர். நிகழும் 2024 ஆம் ஆண்டில், ஆர்டெமிஸ் அக்கார்ட்ஸ் - ல் கையெழுத்திடும் முதல் நாடாக பெல்ஜியம் வரலாறு படைத்துள்ளது. ஏற்கனவே, ஐரோப்பிய விண்வெளி மையத்துக்கு பெல்ஜியம் சார்பாக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் நாடாக பெல்ஜியம் உள்ளது. அந்த வகையில், இந்த நிகழ்வு முக்கியமானதாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu