மேற்குவங்க மாநில பட்ஜெட் - 3.39 லட்சம் கோடி மதிப்பில் தாக்கல்

February 15, 2023

2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான மேற்கு வங்க மாநில பட்ஜெட்டை மாநில நிதி அமைச்சர் சந்திரமா பட்டாச்சார்யா இன்று வெளியிட்டார். சுமார் 3.39 லட்சம் கோடி மதிப்பில் மேற்குவங்க மாநில பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயிகள் நலன், தேயிலை துறையின் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோருக்கான உதவி ஆகியவற்றை முன்னிறுத்தி மாநில பட்ஜெட் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த பின்னர், முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியினர் வெளிநடப்பு […]

2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான மேற்கு வங்க மாநில பட்ஜெட்டை மாநில நிதி அமைச்சர் சந்திரமா பட்டாச்சார்யா இன்று வெளியிட்டார். சுமார் 3.39 லட்சம் கோடி மதிப்பில் மேற்குவங்க மாநில பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயிகள் நலன், தேயிலை துறையின் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோருக்கான உதவி ஆகியவற்றை முன்னிறுத்தி மாநில பட்ஜெட் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த பின்னர், முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இன்று அறிவிக்கப்பட்ட மேற்குவங்க பட்ஜெட்டின் படி, மாநிலத்தின் ஜிடிபி 8.4% உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டின் தொழில் துறை வளர்ச்சி, இந்தியாவிலேயே மிக உயர்வாக, 7.8% ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளம் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான நிதியாக சுமார் 350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், 2 லட்சம் இளம் தொழில் முனைவோருக்கு 5 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

மேலும், பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பாக விவசாயத்துறையின் வருமான வரி நீக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும், 11500 கிலோமீட்டர் தூரத்திற்கு கிராமப்புற சாலைகள் சுமார் 3000 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதி வாய்ந்த உள்ளூர் தேயிலை தோட்ட பணியாளர்களுக்கு பட்டா வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், மீனவ சமுதாயத்திற்கு நலனளிக்கும் வகையில், பதிவு செய்யப்பட்ட மீனவர் இறக்கும் பட்சத்தில் அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் வரையிலான தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu