ப்ரோ கபடி லீக் போட்டி நூறாவது லீக்காட்டத்தில் தபாங் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதியது.
ப்ரோ கபடி லீக் போட்டி 12 அணிகள் உடன் நடைபெற்று வருகிறது. இதில் நூறாவது லீக்காட்டத்தில் தாபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் அணி மோதியது. இதில் டெல்லி அணி 16 ஆட்டத்தில் 10வெற்றி, 4 தோல்வி, 2 ட்ராவுடன் 59 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் இந்த சுற்றில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை டெல்லி அடையும். பெங்காலி அணி 16 ஆட்டத்தில் 6 வெற்றி, 8 தோல்வி, இரண்டு ட்ராவுடன் 39 புள்ளிகள் பெற்று 10வது இடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 45- 35 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.














