பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு - 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு

November 27, 2023

ஒவ்வொரு ஆண்டும் பெங்களூருவில் நடைபெறும் தொழில்நுட்ப மாநாடு, இந்த ஆண்டு நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26 வருடங்களாக, பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு நடைபெற்று வருகிறது. நடப்பாண்டிற்கான மாநாட்டு தேதியை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, நவம்பர் 29 அன்று மாநாட்டை தொடங்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விப்ரோ, இன்போசிஸ் போன்ற முன்னணி தொழில்நுட்ப […]

ஒவ்வொரு ஆண்டும் பெங்களூருவில் நடைபெறும் தொழில்நுட்ப மாநாடு, இந்த ஆண்டு நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 வருடங்களாக, பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு நடைபெற்று வருகிறது. நடப்பாண்டிற்கான மாநாட்டு தேதியை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, நவம்பர் 29 அன்று மாநாட்டை தொடங்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விப்ரோ, இன்போசிஸ் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். பங்குச் சந்தையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி வரும் ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத், பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu