பெண்கள் பிரீமியர் லீக் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. கடந்த மாதம் 23ஆம் தேதி இரண்டாவது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் 5 அணிகள் பங்கேற்கள்ள நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அவ்வகையில் நேற்று நடைபெற்ற 19வது லீக்காட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனை […]

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

கடந்த மாதம் 23ஆம் தேதி இரண்டாவது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் 5 அணிகள் பங்கேற்கள்ள நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அவ்வகையில் நேற்று நடைபெற்ற 19வது லீக்காட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து மும்பை அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது. இதில் 15 ஓவரில் மூன்று விக்கெட்டு இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்த நிலையில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி, மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu