ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நேற்று, டெல்லி கேப்பிட்டல் அணியுடன் மோதிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 157 எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில், 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். இதன் மூலம், வெற்றி பெற்ற பெங்களூரு அணி, தகுதிப் பட்டியலில் 12 புள்ளிகள் உடன் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. மேலும், பிளே ஆப் தகுதி சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை நீட்டித்துக் கொண்டுள்ளது.