போலி சாட் ஜிபிடி செயலிகள் - எச்சரிக்கை

February 6, 2023

ஓபன் ஏஐ நிறுவனம் வடிவமைத்துள்ள சாட் ஜிபிடி செயலி பொதுமக்களிடையே சமூக ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், சாட் ஜிபிடி போன்றே செயல்படும் பல போலியான செயலிகள் வெளியாகி உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி அதிகாரப்பூர்வ செயலி எதையும் உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் தளங்களில் சாட் ஜிபிடி என்ற பெயரில் பல்வேறு செயலிகள் காண்பிக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை […]

ஓபன் ஏஐ நிறுவனம் வடிவமைத்துள்ள சாட் ஜிபிடி செயலி பொதுமக்களிடையே சமூக ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், சாட் ஜிபிடி போன்றே செயல்படும் பல போலியான செயலிகள் வெளியாகி உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி அதிகாரப்பூர்வ செயலி எதையும் உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் தளங்களில் சாட் ஜிபிடி என்ற பெயரில் பல்வேறு செயலிகள் காண்பிக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை போலியானது, மேலும் கைப்பேசிகளில் உள்ள தரவுகளை திருடுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. எனவே, இவ்வாறு சாட் ஜிபிடி செயலியை தரவிறக்கம் செய்தவர்கள் உடனடியாக அதனை நீக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சில போலி செயலிகளின் பெயர்கள் ப்ளூம்பர்க்கில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை: AI Chat Companion, ChatGPT 3: Chat GPT AI, Talk GPT - Talk to ChatGPT, ChatGPT AI Writing Assistant, Open Chat -AI Chatbot A, Genie - GPT AI A, Write For Me GPT AI A, ChatGPT - GPT 3, Alfred - Chat with GPT 3, Chat w. GPT AI - Write This, ChatGPT AI Writing Apps, Wiz AI Chat Bot Writing H, Chat AI: Personal AI Assistant, Wisdom Ai - Your AI Assistant ஆகியவை ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu