சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங்கின் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவ்வாறு அவர் பேசுகையில், செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று பகத் சிங்குடைய பிறந்த நாளைக் கொண்டாட உள்ளோம். பகத் சிங்கின் பிறந்த நாளுக்கு சற்று முன்பாக ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது.
சண்டிகர் விமான நிலையத்திற்கு இனி உயிர்த்தியாகி பகத் சிங்கின் பெயர் சூட்டப்படும் . இது மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்றாகும். சண்டிகர், பஞ்சாப், ஹரியாணா, இன்னும் தேசத்தின் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
தியாகிகளின் நினைவிடங்கள், அவர்களின் பெயரில் இருக்கும் இடங்கள், அமைப்புக்களின் பெயர்கள் ஆகியன, நமது கடமைகள் குறித்து நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. சில நாட்கள் முன்பாக கர்த்தவ்ய பாத்தில் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் உருவச்சிலை நிறுவப்பட்டது என்று அவர் பேசினார்.