ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரியாக பஜன்லால் சர்மாவை நியமித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 115 இடங்களில் பாஜக கட்சி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து ராஜஸ்தானில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக பஜன்லால் சர்மாவை நியமித்து ராஜ்நாத் சிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.