இந்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு மற்றும் விமான நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகும். இந்த நிறுவனம், 2024 ஆம் நிதியாண்டில் இதுவரை 26613 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளது. இதன் விளைவாக, நிறுவனத்தின் பங்குகள் தொடர்ச்சியாக உயர்வை பதிவு செய்து வந்தன. நேற்றைய நிலவரப்படி,பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளன.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்குகள், 2023 ஆம் ஆண்டில் 82% உயர்ந்துள்ளன. நேற்றைய வர்த்தக நேர முடிவில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஒரு பங்கு மதிப்பு 182.5 ரூபாயாக உள்ளது. நேற்றைய வர்த்தக நாளின் இடையில், ஒரு பங்கு 184.5 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது, பாரத் எலக்ட்ரானிக்ஸ் வரலாற்றில் உச்சபட்ச பங்கு மதிப்பு ஆகும். கடந்த 5 ஆண்டுகளில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்குதாரர்களுக்கு 500% க்கும் கூடுதலான வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.