எல்.கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

February 3, 2024

பாஜக மூத்த தலைவரான எல்.கே அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே அத்வானி தனது 14 வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் தனது இளம் வயதிலேயே ஜனசங்கம் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு மூத்த தலைவர்களில் ஒருவராக தேர்வானார். பின்னர் காங்கிரசுக்கு எதிரான தலைவர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டு வந்தார். அதன் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் மத்திய […]

பாஜக மூத்த தலைவரான எல்.கே அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே அத்வானி தனது 14 வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் தனது இளம் வயதிலேயே ஜனசங்கம் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு மூத்த தலைவர்களில் ஒருவராக தேர்வானார். பின்னர் காங்கிரசுக்கு எதிரான தலைவர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டு வந்தார். அதன் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் மத்திய மந்திரி ஆக பதவி ஏற்றார். 1980 ஆம் ஆண்டு பாஜகவை வாஜ்பாய் உடன் இணைந்து உருவாக்கினார். பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக பணியாற்றிய இவர் 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை துணை பிரதமராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் பிரதமர் வேட்பாளராக ஒரு தடவை அறிவிக்கப்பட்டு இருந்தார். தற்போது டெல்லியில் உள்ள வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். இவரின் சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu