நிதித்துறை சார்ந்த பிரபல யூனிகார்ன் நிறுவனமான பாரத் பே, கடந்த அக்டோபர் மாதத்தில் நேர்மறையான எபிட்டா மதிப்பை எட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.
பாரத் பே நிறுவனம், தனது அத்தனை வர்த்தக துறைகளிலும் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 1500 கோடியைத் தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் நிதி ஆண்டுக்குப் பிறகு, வருவாயில் 31% உயர்வு பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, பல மாதங்களாக காணப்பட்டு வந்த முன்னேற்றம், நேர்மறையான எபிட்டா மதிப்பை எட்டுவதற்கு துணை புரிந்ததாக சொல்லப்பட்டுள்ளது.














